திருத்தணி முருகன் கோவிலில் கார் பார்க்கிங் வசதி இல்லாததால் பக்தர்கள் அவதி
திருத்தணி முருகன் மலை கோவில் பகுதியில் பார்க்கிங் வசதி செய்து தர கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆடி மாத பௌர்ணமி, ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை, என்பதால், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு அதிகளவு வெளியூர் பக்தர்கள் தரிசனத்திற்கு படையெடுத்து வந்தனர். காவடி எடுத்து வந்து நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மலைக்கோவிலில் அதிகளவு பக்தர்கள் குவிந்ததால் மலைக்கோவில் சாலையில் 2 மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் தொடர்ச்சியாக ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற 5- வது படை திருக்கோயிலாகும். இந்த திருக்கோவிலுக்கு இன்று அதிகளவு ஆந்திர மாநிலம், கர்நாடக மாநிலம், மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடி மாத பௌர்ணமி, ஞாயிற்றுக்கிழமை புது விடுமுறை, என்பதால் அதிகளவு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மலை கோவிலில் குவிந்தனர்
100 ரூபாய் கட்டண வரிசையில் சுமார் இரண்டு மணி நேரமும் கட்டணமில்லா பொது தரிசனத்தில் மூன்று மணி நேரமும் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
அதிகளவு பக்தர்கள் முருகப்பெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்த காவடி எடுத்து வந்து தரிசனம் செய்தனர்.
உற்சவர் முருகப்பெருமான் சிறப்பு தாமரை மலர் மாலையில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சிறப்பு தீப ஆராதனை நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு அதிக அளவு பக்தர்கள் மலைக்கோவிலில் தொடர்ந்து குவிந்ததால் மலைக்கோயில் செல்லும் சாலையில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக தொடர்ச்சியாக போக்குவரத்து நெரிசல் சாலையில் ஏற்பட்டது.
மேலும் மலைக் கோயிலில் போதிய பார்க்கிங் வசதி இல்லாததால் மலைக்கோயில் அடிவாரம் வரை பக்தர்கள் வந்த வாகனங்கள் வரிசையாக நீண்ட வரிசையில் நின்றது.
இதனால் முருக பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர். எனவே பக்தர்களை வாகனங்கள் நிறுத்துவதற்கு போதுமான இடவசதியை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் உடனடியாக மலைக்கோவிலில் நிரந்தர பார்க்கிங் வசதி வாகனங்களுக்கு ஏற்படுத்த வேண்டும் பக்தர்கள் தங்கு தடை இன்றி சாமி தரிசனம் செய்ய ஏற்படுத்த வேண்டும் என்று முருக பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.