திருத்தணி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று தரிசனம் செய்தனர்.;

Update: 2023-07-02 10:08 GMT

திருத்தணி முருகன் கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. (உள்படம்- சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான்)

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மூன்று மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

முருக பெருமானின் ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கும் திருத்தணி அருள்மிக சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். இக்கோவிலுக்கு தமிழக மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, தெலுங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர் இதனால் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. ஏராளமான பக்தர்கள் திருத்தணி மலைக்கோவிலில் குவிந்தனர். பக்தர்கள் பலர் தங்களது நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் சரவணப் பொய்கை திருக்குளத்தில் நீராடி திருப்படிகள் வழியாக மலைக் கோவில் வந்தடைந்தனர். மலைக் கோயிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பியதால் அரோகரா பக்தி முழக்கங்களுடன் மலைக் கோவில் விழா கோலம் பூண்டு காணப்பட்டது.

இதன் காரணமாக இலவச தரிசனம் மார்க்கத்தில் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தது பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் அதே நேரத்தில் ரூபாய் 100 சிறப்பு தரிசனம் செய்ய இரண்டு மணி நேரம் பக்தர்கள் காத்திருந்தனர். நீண்ட நேரம் காத்திருந்தாலும் சுவாமியை பார்த்து தரிசனம் செய்த சந்தோஷத்தில் பக்தர்கள் சென்றனர். விடுமுறை நாள் என்பதால் தான் இன்று அதிக அளவில் பக்தர்கள் கூட்டம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News