பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் கவுன்சிலர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் ஒன்றியக்குழு தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கவுன்சிலர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-02-01 02:00 GMT

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட 9 ஒன்றிய கவுன்சிலர்கள்.

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த ஜான்சிராணி உள்ளார்‌.  ஒன்றியத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 12 ஒன்றிய கவுன்சிலர்களில் அதிமுகவைச் சேர்ந்த ஒருவர் இறந்து விட்ட நிலையில், 11 உறுப்பினர்களில் 9 பேர் ஒன்றியக்குழு தலைவர் மீது கடந்த நவம்பர் மாதம் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தனர்.

திருத்தணி கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மான கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் பங்கேற்காத நிலையில் அதிமுக, திமுக, தேமுதிக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சேர்ந்த 9 பேர் பங்கேற்று தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இருப்பினும் இதுவரை நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் தொடர்பான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் வளர்ச்சிப்பணிகள் வெகுவாக பாதிக்கப்படுவதாகவும், ஊரக வளர்ச்சி முகமை திட்ட உதவி இயக்குநர் உத்தரவின் பெயரில் சான்றிதழ் காட்டி உடனடியாக ஊராட்சி ஒன்றிய கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு நெருக்கடி தருவதாக கோரப்படுகிறது.

இதனை கண்டிக்கும் வகையில் திமுக, அதிமுக, தேமுதிக, காங்கிரஸ், ஆகிய கட்சிகளை சேர்ந்த 9 ஒன்றிய கவுன்சிலர்கள் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உடனடியாக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுத்து அதிமுக ஒன்றியக் குழுத் தலைவரை நீக்க வேண்டும் என்றும், வளர்ச்சி பணிகள் விரைந்து மேற்கொள்ள ஏதுவாக மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்தனர்.


Tags:    

Similar News