திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோவில் பணியாளர்களுக்கு கொரோனா தோற்று

திருத்தணி சுப்பிரமணிய சாமி திருக்கோயில் பணியாளர்கள் 10 பேருக்கு கொரோனா நோய் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-01-10 04:15 GMT

திருத்தணி முருகன் கோவில்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் முருகப் பெருமானின் பிரசித்தி பெற்ற கோவிலாகும் இந்த திருக்கோயிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உதவி ஆணையர் ஒருவருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில் இந்த திருக்கோயிலில் உள்ள 118 திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் திருக்கோயில் அர்ச்சகர்கள் இரண்டு பேர், திருக்கோயில் ஒப்பந்த பணியாளர்கள் 50 பேர் உள்பட 170 பேருக்கு கொரோனா நோய் தொற்று பரிசோதனை செய்ய இந்து அறநிலை துறை அதிகாரிகள் கூறியிருந்தார்கள். அதனடிப்படையில் 60 திருக்கோயில் பணியாளர்கள் கொரோனா பரிசோதனை செய்ததில் 6 திருக்கோயில் பணியாளர்கள் 3 பெண் ஒப்பந்த பணியாளர்கள், ஒரு அர்ச்சகர் உள்பட 10 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் திருக்கோயில் அலுவலகத்தில் வேலை செய்யும் மற்ற பணியாளர்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் திருக்கோயில் அலுவலகத்தில் வேலை சம்பந்தமாக வந்த செல்பவர்களுக்கும் கொரோனா நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் திருக்கோயில் அலுவலகத்தில் தொடர்ந்து வேலை செய்யும் ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர்.

கொரோனா நோய்தொற்று பணியாளர்களுக்கு சரியாகும் வரை விடுமுறை அளிக்க வேண்டும் என்று திருக்கோவில் பணியாளர்கள்  அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் பணியாளர்களை வைத்து கோயில் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News