திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை பெருவிழா தேரோட்டம்

திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை பெருவிழா தேரோட்டத்தில் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2024-04-21 08:30 GMT

திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை பெருவிழா தேரோட்டம் நடைபெற்றது.

திருத்தணி முருகன் கோவிலில் திருத்தேர் விழா விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரின் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோவில் உலக பிரசித்தி பெற்ற திருக்கோவிலாகும் இக்கோவில் முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாகும்.இந்த திருக்கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ நிகழ்வு வெகு விமரிசையாக பெருவிழா நடைபெற்று வருகிறது.


இந்த நிகழ்வில் முக்கிய நிகழ்வாக திருத்தேரோட்டம் நிகழ்வு நேற்று நடைபெற்றது. மலைக்கோயில் அலங்கரிக்கப்பட்ட மரத்தேரில் உற்சவர் முருகப்பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார் முன்னதாக உச்சவருக்கு பால்,தயிர்,சந்தனம், இளநீர், ஜவ்வாது, தேன், பன்னீர், திருநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களால் இதனைத் தொடர்ந்து மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.


பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு திருத்தேரினை  வடம் பிடித்து இழுத்து திருக்கோவில் மாடவீதி வீதியை உலா வந்து பக்தர்களுக்கு முருகப்பெருமான் அருள் பாலித்தார். மங்கள இசை வாத்தியங்கள் கைலாய வாத்தியங்கள் முழங்க திருத்தேர் உலா நடைபெற்றது. மற்றும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. ஆலயத்தின் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Similar News