கூலி உயர்வு கேட்டு நடந்த பேச்சுவார்த்தை தோல்வி ;ஒருங்கிணைப்பாளர் மீது 5 பிரிவுகளில் வழக்கு
Case Against Weaving Labour Co-ordinator திருத்தணியில் கூலி உயர்வு கேட்டு நெசவு தொழிலாளர்கள் போராட்டம். இது சம்பந்தமாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் தோல்வி அடைந்ததால் நெசவுத் தொழிலாளர்கள் ஒருங்கிணைப்பாளர் மீது5பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டது.;
Case Against Weaving Labour Co-ordinator
திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கூலி உயர்வு கேட்டு பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவுற்றதால் போராட்டம் நடத்திய நெசவுத் தொழிலாளர் ஒருங்கிணைப்பாளர் மீது வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகிய இருவர் கொடுத்த புகாரின் மீது காவல்துறையினர் 5 பிரிவினில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கூலி உயர்வு கேட்டுப் போராடிய நெசவுத் தொழிலாளர்கள் மீது வழக்கு போட்ட காவல்துறை நெசவு தொழிலாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை, ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பம், ஸ்ரீ காளிகாபுரம், போன்ற பத்துக்கு மேற்பட்ட பகுதியை சார்ந்த நெசவு தொழிலாளர்கள்.
கூலி உயர்வு வேண்டுமென்று கடந்த 10 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.இவர்களிடம் இரண்டு கட்டமாக வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை செய்தனர். இந்த இரண்டு கட்டங்களும் தோல்வியில் முடிந்தது. மூன்றாவது கட்டமாக
இதில் அறிஞர் அண்ணா நெசவுத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள் கலாம் விஜயன் மற்றும் நெசவாளர்கள் உடன் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் தீபா மற்றும் காவல்துறையினர் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கூலி உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது காரசாரமான விவாதம் சென்று கொண்டிருக்கும் பொழுது கூலி உயர்வு குறித்து நெசவு தொழிலாளர்களின்.
எதிர் தரப்பு சென்னை மண்ணடி வியாபாரிகள் நாங்களும் கஷ்டத்தில் தான் இருக்கிறோம் என்று ஆகையால் கூலி உயர்வு. நீங்கள் கேட்டது போல் ரூபாய் 8 கொடுக்க முடியாது என்று சென்னை மண்ணடி வியாபாரிகள் தரப்பில் கூறப்பட்டது. இறுதியாக ரூபாய் இரண்டு ரூபாய் மட்டுமே கொடுக்க முடியும் என்று கூறினார்கள்
இதனால் நெசவுத் தொழிலாளர்கள் வறுமையில் வாடும் எங்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும் என்றும் எங்கள் கஷ்டத்தை பாருங்கள் என்று பல்வேறு முறை இவர்கள் பேச்சு வார்த்தையில் கூறினார்கள். அப்போது காரசார விவாதம் நடந்து கொண்டிருந்தது .
திடீரென்று பேச்சுவார்த்தை கடும் வார்த்தைகளாக சென்று கொண்டிருக்கும் பொழுது நெசவாளர்கள் தரப்பில் நெசவாளர் வழக்கறிஞர் கலாம் விஜயன் பேசிக்கொண்டிருக்கும் போது கையில் இருந்த பேப்பர் கோப்புகளை ஆதாரத்தை பாருங்கள் என்று வீசினார்.
இது வருவாய் கோட்டாட்சியர் மீது பட்டதாக அவரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வருவாய் கோட்டாட்சியரை அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட திருத்தணி வட்டாட்சியர் மதன் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகார் மனுவில் ஆய்வாளர இரவோடு இரவாக நெசவுத் தொழிலாளர் பேச்சுவார்த்தையை முடக்க அவர்களது சார்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபடும் கலாம் விஜயின் மீது புகார் அளித்த திருத்தணி வட்டாட்சியர் மதன் .இவர் மீது நெசவாளர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.வட்டாட்சியர் கொடுத்த புகாரை பதிவு செய்து கொண்ட திருத்தணி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராக்கி குமாரி அவசரகதியில் வழக்கு பதிவு செய்வதாக மூன்று பிரிவுகளில் இவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்தார்.
ஆனால் அந்த வழக்கில் கலாம் விஜயன் பள்ளிப்பட்டு தாலுகாவை சேர்ந்தவர் ஆனால் அவசர கதி வழக்குப்பதிவில் திருத்தணி தாலுகா என்று தவறாக பதிவு செய்துள்ளார்.
மொத்தத்தில் காவல் துறையும் நெசவாளர்கள் மீது புகாரை பதிவு செய்ய அவசரம் காட்டியது ஏன் என்று நெசவுத் தொழிலாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதேபோல் இதே பேச்சு வார்த்தைக்கு கிராம நிர்வாக அலுவலர் செல்வம் என்பவர் இவர் ஒரு புகாராக அடித்தல் திருத்தல் உடன் அவர் ஒரு புகாரை அளித்துள்ளார். அவசரக்கதியில் 800 பேர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு இரண்டு மணி நேரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டம் செய்தனர் என்றும் அந்த புகாரில் பல தவறுகள் உள்ளது இருந்தாலும் அந்த புகாரையும் பெற்றுக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், ஆண்கள் அனைவரும் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகார் மீதும் போராட்ட ஒருங்கிணைப்பாளர் நெசவு தொழிலாளி கலாம் விஜயன் மீது இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.திருத்தணி போலீசார்
நெசவு தொழிலாளர்கள் போராட்டத்திற்கு வந்தவர்கள் மீது அதன் ஒருங்கிணைப்பாளர் மீது ஐந்து பிரிவு என்று போலீசார் அவசரமாக வழக்கு பதிவு செய்ததால் நெசவு தொழிலாளர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
மேலும் கூலி உயர்வு ஒப்பந்த பேச்சு வார்த்தைக்கு பிப்ரவரி 27ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் கலந்து கொள்ளுங்கள் என்றும் அழைப்பு கொடுத்ததால்.அவசரத்தில் நெசவு தொழிலாளர்கள் மீது வழக்கும் பதிவு செய்வீர்கள் பேச்சுவார்த்தைக்கும் அழைப்பீர்களா என்று நெசவு தொழிலாளர்கள் கடும் கோபத்துடன் கேள்வி எழுப்பி உள்ளனர்..
நெசவுத் தொழிலாளர்கள் ஒருங்கிணைப்பாளர் மீது வழக்கு பதிவு செய்ததால் இந்த பேச்சு வார்த்தை தொடர் இழுபறி ஏற்படும் என்று கூறப்படுகிறது. மேலும்இந்த வழக்கு பதிவு செய்ததால் நெசவுத் தொழிலாளர்கள் கடும் கோபத்துடன் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
நெசவுத் தொழிலாளி இவர்களின் கூலி உயர்வு ஒப்பந்த பேச்சு வார்த்தைக்கு சென்ற கலாம் விஜயன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால்அவர் தற்போது தலைமறைவாக உள்ளார். அவர் எப்போது வேண்டுமானாலும் போலீசார் கைது செய்வார்கள் என்று போலீஸ் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.