திருத்தணி அருகே ரோட்டில் உடைந்த தடுப்பு விபத்து ஏற்படும் அபாயம் :அதிகாரிகள் நடவடிக்கை தேவை
Broken Barrier On The Road திருத்தணி அருகே சென்னை-திருப்பதி தேசிய சாலை அருகே அமைக்கப்பட்டுள்ள தடுப்பு உடைந்து காணப்படுகிறது இதனால் விபத்துநடக்க வாய்ப்புள்ளது. இதனை நெடுஞ்சாலை துறையினர் சீர் செய்ய வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
அதிவேகமாக வரும் வாகனங்கள் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையே நீடித்து வருகிறது.
Broken Barrier On The Road
திருத்தணி அருகே சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இரும்பு தடுப்பு உடைந்துள்ளது விபத்து ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது .சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் போதிய பராமரிப்பு ஏற்படுத்தி விபத்துகள் நடக்காதவாறு நடவடிக்கை எடுக்க வே ண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகாவிற்கு உட்பட்ட சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை உள்ளதுஇந்த பகுதிகளில் கொசத்தலை ஆறு, மற்றும் அதிக அபாயகரமான மரண பள்ளங்கள் அதிக அளவு உள்ளது.10 வருடங்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை இந்த பகுதியில் அமைக்கப்பட்ட போது சாலை தடுப்பு இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது தற்போது பல்வேறு சூழ்நிலைகளில் விபத்து மற்றும் பல்வேறு காரணங்களில் சாலை தடுப்புகள் பல இடங்களில் உடைந்து உள்ளது
உடைந்த சாலை தடுப்புகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பராமரிப்பு செய்யும் நிர்வாகம் யாரும் இதனை கண்டு கொள்ளாமல் சரி செய்யவில்லை அதனால் பகல் மற்றும் இரவு வேலைகளில் சாலை தடுப்புகள் இல்லாததால் வாகனங்கள் முந்தி செல்லும் போது விபத்துகள் ஏற்பட்டால் அதிக உயிர் சேதம் ஏற்படும் என்று வாகன ஓட்டிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்
எனவே சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் சாலை தடுப்புகளை சரி செய்து சாலைகளை அதிகளவு பள்ளங்கள் உள்ள பகுதிகளை பராமரிப்பு செய்யவும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன் வராத காரணத்தினால் இவை அனைத்தையும்.உடனடியாக போர்க்கால அடிப்படையில் சரி செய்வதற்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.