கோரமங்கலம் ஊராட்சியில் 3வது அலை தாக்கம் குறித்து விழிப்புணர்வு முகாம்
திருத்தணி கோரமங்கலம் ஊராட்சியில் கொரோனா 3வது அலை தாக்கம் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.;
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஊராட்சி ஒன்றியம் கோரமங்கலம் ஊராட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி பொதுமக்களுக்கு கொரோனா மூன்றாம் அலை தாக்கம் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர், சுகாதார அலுவலர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் கே. நரசிம்மராஜ் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் செய்திருந்தனர்.