பள்ளிப்பட்டு பகுதியில் பெண்ணை தாக்கிய நபரை கைது செய்த போலீசார்
பள்ளிப்பட்டு பகுதியில் பெண்ணை தாக்கிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர்;
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த பள்ளிப்பட்டு பகுதியில் சுந்தரமூர்த்தி -வேண்டா என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். வேண்டா தனது வீட்டின் அருகே உள்ள சாலையில் மார்க்கெட் பகுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு எதிரே வந்த தன்ராஜ் என்ற வாலிபர், வேண்டா மீது மோதி உள்ளார்.
இதில் வேண்டா - கனகராஜ் இடையே வாக்குவாதம் முற்றி, கனகராஜ் பின்னர் அவரை கற்களால் தாக்கியும் கைகலப்பு ஏற்பட்டது. இதில் வேண்டா காயம் அடைந்தார். இதனை பார்த்துக் கொண்டிருந்த அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி அனுப்பி வைத்து காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்த தன்ராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.