ஆடி கிருத்திகை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு
இன்று ஆடி கிருத்திகை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் திருவிழா பக்தர்கள் பங்கேற்று காவடி எடுத்தும், அழகு குத்தியும், பால்குடம் சுமந்தும் முருகனை தரிசனம் செய்து வருகின்றனர்.
திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை லட்சக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் மலைக் கோயிலில் குவிந்தனர் 5 மணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை வழிபட்டு வருகின்றனர். அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு காவடியுடன் மலைக்கோயிலில் நடந்த சென்று முருகப்பெருமானை சாமி தரிசனம் செய்தார்.ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாகத்திகழும் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் விளங்கி வருகிறது.
இத்திருக்கோயில் ஸ்லத்தில் ஆடி கிருத்திகை திருவிழா, கந்த சஷ்டி, திருப்படி திருவிழா,சித்திரை பிரம்மோற்சவம், மாசி பிரம்மோற்சவம்,உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம், அதன்படி இன்று அதிகாலை 5 மணிக்கு மூலவருக்கு பல்வேறு நறுமண திருபியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு தங்ககீரிடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு திருத்தணி மலைக்கோவிலுக்கு காவடி எடுத்து வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தார்.
தொடர்ந்து காவடி மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமானுக்கு பால்,பன்னீர்,இளநீர், ஜவ்வாது,தேன்,சந்தனம், திருநீர் மற்றும் பஞ்சாமிர்தம் போன்ற சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறும்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகா,ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கு கானா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
பல பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக காவடிகள் எடுத்து, ஆடல், பாடல்களுடன் மலைக்கோயிலுக்கு முருகன் பக்தி பாடல்கள் பாடியபடி கோயிலுக்கு வந்து நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.
அதுபோல் பெருநகர வளர்ச்சி குழும அமைச்சரும் அறநிலைத்துறை அமைச்சருமான சேகர் பாபு திருத்தணி மலைக்கோவிலுக்கு காவடி எடுத்து மலைக்கோயில் படிகள் வழியாகச் சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்தார்.
விழாவிற்காக திருத்தணி முழுவதும் சுமார் 2000 போலீசார் மற்றும் 168 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.பக்தர்கள் வந்து செல்ல தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 560 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.
தென்னக ரயில்வே சார்பில் 3 சிறப்பு ரயில்கள் அரக்கோணம்- திருத்தணி இடையே இயக்கப்படுகிறது.
திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், தற்காலிக கழிவறை மற்றும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.