திருத்தணியில் 105 டிகிரி வெயில். பொதுமக்கள் அவதி;

திருத்தணியில் 105 டிகிரி வெயில் வாட்டி வதைத்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவிப்பு;

Update: 2021-05-29 16:01 GMT

திருத்தணியில் 105 டிகிரி வெயில் கொளுத்துவதால் சாலையில் தோன்றிய கானல் நீர்


 

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 105 டிகிரி வெயில் வாட்டி வதைப்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவிப்பு; வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.

கடந்த சில ஆண்டுகளாகவே கோடை வெயிலின் தாக்கம் திருத்தணியில் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இன்று கோடை வெயில் அதிகபட்சமாக திருத்தணியில் 105 டிகிரி பதிவானது. காலை 9 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை வரை தொடர்கிறது. பகல் நேரங்களில் அனல் காற்று வீசுவதோடு இரவு நேரங்களில் புழுக்கம் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால் நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றது. திருத்தணியில் வெயில் தாக்கம் உச்ச கட்டத்தை அடைந்துள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகின்றது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணியில் அரசு தீவிரம் காட்டி வருவதால், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மேற்கொள்ள வேண்டிய பணிகள் ஆரம்ப கட்டத்தில் கூட எட்டாத நிலையில், எதிர்வரும் நாட்களில் பொதுமக்கள் கடும் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க வருபவர்கள் மட்டுமே சாலையில் காண முடிகிறது. அனல் காற்று வீசுவதால் வீட்டை விட்டு வெளியே வராததால்  காலை 10 மணி முதல் மாலை வரை அனைத்து பகுதிகளும் முழுமையாக  வெறிச்சோடி காணப்படுகிறது.

Tags:    

Similar News