திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு ஆருத்ரா அபிஷேகம்

Aruthra Dharshan Special Pooja திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் மார்கழி மாதம் முன்னிட்டு இரவு முதல், இன்று அதிகாலை வரை நடந்த ஆருத்ரா அபிஷேக விழா திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்.;

Update: 2023-12-27 04:15 GMT

Aruthra Dharshan Special Pooja

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் இரவு முதல், இன்று அதிகாலை வரை நடந்த ஆருத்ரா அபிஷேகத்தில் 33 பழ வகையான அபிஷேகங்கள் நடராஜருக்கு நடந்தது.. இதில், ஆயிரத்திற்கும்மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான, திருவாலங்கடு வடாரண்யேஸ்வரர் கோவில், சிவபெருமான் திருநடனம் புரிந்த ஐந்து சபைகளில், முதல் சபை என்பதால். ரத்தினசபை என்றழைக்கப்படுகிறது. மார்கழி மாதம், திருவாதிரை நட்சத்திரத்தில் நடராஜருக்கு அபிஷேகம் நடப்பதையே, ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படுகிறது.

Aruthra Dharshan Special Pooja


திருவாதிரையையொட்டி திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில்   நடராஜருக்கு நடந்த சிறப்பு அபிஷேகம்  ஆராதனை .

அந்த வகையில்,இரவு, திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில்,இரவு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அதிகாலை வரை நடந்த ஆருத்ரா அபிஷேகத்தில் 33 பழ வகையான அபிஷேகங்கள் நடராஜ பெருமானுக்கு நடந்தது. தொடர்ந்து வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது இதில்,ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இரவு, 9:00 மணிக்கு, ரத்தின சபாபதிப் பெருமான், கோவில் வளாகம் பின்புறத்தில் உள்ள ஸ்தல விருட்சத்தின் கீழ், ஆருத்ரா அபிஷேக மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில், இரவு, விபூதி அபிஷேகத்துடன் ஆருத்ரா அபிஷேகம் விழா துவங்கியது. பின்னர் ,பால் தேன் இளநீர் மாதுளம் வாழைப்பழம் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 33 வகையான அபிஷேகங்கள் இன்று, அதிகாலை, 3:30 மணி வரை, நடத்தப்பட்டது. காலை, 5:00 மணிக்கு, நடராஜ பெருமான் ஆலமர பிரகாரத்தை வலம் வந்து, கோபுர தரிசனத்திற்கு வந்த பின், திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். ஆருத்ரா அபிஷேகம் சிறப்பாக நடந்தது.

இவ்விழாவில் சென்னை,காஞ்சிபுரம் தமிழகத்திலிருந்து பல பகுதிகளிலிருந்து சிவனடியார்கள் விரதம் இருந்து வந்து இந்த ஆருத்ரா  தரிசனத்தைக் கண்டு வழிபட்டனர் விழா ஏற்பாடுகளை திருத்தணி முருகன் கோயில் துணை ஆணையர் ரமணி மற்றும் கோவில் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News