திருத்தணியில் மருத்துவமனை நடத்திய போலி டாக்டர் உதவியாளருடன் கைது

திருத்தணியில் மருத்துவமனை நடத்திய போலி டாக்டர் உதவியாளருடன் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-25 03:15 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சத்யசாய் நகரில் வசித்து வருபவர் பூபாலன் (50). இவர் திருத்தணி அக்கையநாயுடு தெருவில் ஒரு  வீட்டில் மருத்துவமனை நடத்தி வந்தார் இவர். + 2 படித்துவிட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்க்கு தொடர்ந்து வந்த தகவலை அடுத்து ஆட்சியர் உத்தரவின் பேரில் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் காவலன் நேற்று திடீரென திருத்தணி அக்கையநாயுடு பகுதியில் பூபாலன் நடத்தும் கிளினிக்கிற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வினில் பூபாலன் 12 வகுப்பு மட்டுமே படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த கிளினிக்கில் வைத்திருந்த மாத்திரை மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மாவட்ட இணை இயக்குநர் காவலன், திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் திருத்தணி போலீசார் விரைந்து வந்து போலி டாக்டர் பூபாலன் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட அவரது நண்பர் கோபி உள்ளிட்ட இருவரையும் கைது செய்தனர்

போலீசார் நடத்திய விசாரணையில் பூபாலன் மனைவி திருத்தணி மத்தூர் கிராமத்தில் மெடிக்கல் ஷாப் நடத்தி வந்ததும், அதில் பணிபுரிந்த அனுபவத்தின் பேரில் தனியாக கிளினிக் நடத்தி சிகிச்சை அளித்ததும் தெரியவந்தது.

Tags:    

Similar News