திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனம் செய்த நடிகர் சசிகுமார்

தைப்பூசத்தை முன்னிட்டு திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி கோவிலில் திரைப்பட நடிகர் சசிகுமார் சுவாமி தரிசனம் செய்தார்.

Update: 2024-01-25 09:59 GMT

திருத்தணி முருகன் கோவிலில் நடிகர் சசிகுமார் சுவாமி தரிசனம் செய்தார்.

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திரைப்பட நடிகர் சசிகுமார் சுவாமி தரிசனம் செய்தார்.

தைப்பூசம் தமிழகம் முழுவதும் முருக பக்தர்களால் கொண்டாடப்படும் முக்கியமான திருவிழவாக உள்ளது. இதன் காரணமாக முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் பக்தர்கள் பாதயாத்திரையாக சென்றும், காவடி எடுத்து சென்றும் வழிபாடு நடத்துவார்கள். அந்த வகையில் தைப்பூசத்தை முன்னிட்டு இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து  முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு அதிகாலை முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தைப்பூசத்தையொட்டி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, தமிழக மட்டுமல்லாமல் ஆந்திரா, தெலுங்கானா,கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் திரைப்பட இயக்குனரும் நடிகருமான சசிகுமார் முருக பெருமானின் மலைக் கோயிலுக்கு வந்து மூலவர் மற்றும் விநாயகர் சண்முகர், வள்ளி, தெய்வானை உற்சவர் ஆகிய சந்நிதிகளில் சிறப்பு பூஜைகள் நடத்தி தரிசனம் செய்தார். அப்போது ஆலயத்தின் சார்பில் அவருக்கு பிரசாதம் மலர் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.அப்போது அங்கு இருந்த பக்தர்கள் மற்றும் போலீசார் நடிகர் சசிகுமாருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இதனை தொடர்ந்து சசிகுமார் கூறுகையில் தைப்பூசத்தையொட்டி திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தேன். பக்தர்கள் அனைவரும் பாதுகாப்பாக சுவாமி தரிசனம் செய்து செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Tags:    

Similar News