பிளஸ் 1 தேர்வில் தோல்வி அடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை
திருவள்ளூர் அருகே பிளஸ் 1 தேர்வில் தோல்வி அடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
திருவள்ளூர் அருகே ௧௧ம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த மன உளைச்சலில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம் திருவலாங்காடு அடுத்த தும்பிக்குளம் கிராமத்தில் வசித்து வருபவர் கொல்லாபுரி. இவரது மகள் புவனேஸ்வரி(16). திருத்தணி அரசு பள்ளியில் 11.வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நடந்த முடிந்த11 வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் புவனேஸ்வரி இரண்டு பாடப்பிரிவில் தேர்ச்சி பெறாததால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவிக்கு அவரது குடும்பத்தினர் ஆறுதல் கூறினார்கள். ஆனாலும் மாணவி சமாதானம் அடையவில்லை.
இந்நிலையில் நேற்று மாலை மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து வீட்டிற்குள் சென்று விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதன் பின்னர் வீட்டுக்கு வந்த பெற்றோர்கள் நீண்ட நேரம் ஆகியும் அவரது மகள் புவனேஸ்வரி வீட்டின் கதவை திறக்காததால் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது தூக்கில் தூங்கியதைக் கண்டு அதிர்ச்சி அணிந்து கூச்சலிட்டார்.
இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று புவனேஸ்வரி உடலை கீழே இறக்கினார்கள். இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் புவனேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்வில் தோல்வி அடைந்த மன உளைச்சலில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.