சாலையில் சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென தீ பிடித்து எரிந்து சேதம்

திருத்தணி அருகே பழுதாகிய நின்ற மோட்டார் சைக்கிள் சரி செய்ய மெக்கானிக் மோட்டார் சைக்கிளை செட்டுக்கு ஓட்டி சென்றபோது திடீரென தீப்பற்றி எரிந்தது.

Update: 2024-10-07 09:00 GMT

தீ பற்றி எரியும் மோட்டார் சைக்கிள்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த, 18 வயது கல்லூரி மாணவி ஒருவர் ஸ்கூட்டியில் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நோக்கி வந்துக் கொண்டிருந்தார். திருத்தணி -கன்னிகாபுரம் மாநில நெடுஞ்சாலை, கன்னிகாபுரம் அருந்ததி காலனி பகுதி அருகே வந்தபோது ஸ்கூட்டி பழுதாகி நின்றது.

கல்லூரி மாணவி திருத்தணியில் உள்ள இரு சக்கர வாகனகள் பழுது பார்க்கும் கடைக்கு மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். இதையடுத்து மெக்கானிக், சத்யா (வயது 31) என்பவர் ஸ்கூட்டியை பழுது பார்க்க சம்பவ இடத்திற்கு சென்றார்.

பின்னர், மெக்கானிக் ஸ்கூட்டியை பழுது பார்த்து கடைக்கு எடுத்து வரும்போது திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் சத்யா,முகத்தில் லோசான தீக் காயத்துடன் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பகுதியில் இருந்து குடியிருப்பு வாசிகள் தண்ணீருடன் வந்து தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் இரு சக்கர வாகனம் முழுதும் மலமளாவென தீ கொழுந்து விட்டு சிறிது நேரத்திலே எரிந்து சாம்பாலானது.

தொடர்ந்து சத்யா திருத்தணி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று வீடு திரும்பினர்.இது குறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News