ஸ்ரீ எல்லையம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
திருத்தணி அருகே நொச்சிலி கிராமத்தில் ஸ்ரீ எல்லையம்மன் கோவில் கும்பாபிஷேக விழா த்ரில்லான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.
நொச்சிலி கிராமத்தில் உள்ள ஸ்ரீ எல்லையம்மன் கோயிலில் இன்று நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு ஒன்றியம நொச்சிலி ஊராட்சியில் ஸ்ரீ எல்லையம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் கடந்த சில மாதங்களாக பல லட்சம் ரூபாய் செலவில் ஆலய திருப்பணிகள் நடைபெற்று வந்தது.இந்நிலையில் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் இன்று காலை 7 மணிக்கு மேல் 8.30 மணிக்குள்ளாக மகா கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழாவையொட்டி கோயில் வளாகத்தில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு யாகசாலைகள் அமைத்து சிறப்பு ஹோமம் நடைபெற்றது. பின்னர் காலை 8 மணிக்கு மேல் மங்கள வாத்தியங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு புதிதாக அமைக்கப்பட்ட 25 அடி உயர அம்மன் சிலைக்கு புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்பொழுது அங்கு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கம் மிட்டனர் அங்கு வந்திருந்த திரளான பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
பின்னர் மூலவருக்கு பால் ,தயிர், சந்தனம், இளநீர், மஞ்சள், ஜவ்வாது, தேன், உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களாலும் திரு ஆபரணங்களால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். அப்போது பக்தர்கள் அனைவருக்கும் ஆலயத்தின் சார்பில் அன்னதானம் பிரசாதங்களும் வழங்கப்பட்டது. இரவு உற்சவர் கிராம முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார். இதில் நொச்சிலி சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை எரபராஜ் குடும்பத்தினர் செய்திருந்தனர்.