திருத்தணி அருகே சாலையை கடக்க முயன்ற சிறுமி வாகனம் மோதி உயிரிழப்பு
திருத்தணி அருகே சாலையை கடக்க முயன்ற சிறுமியின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாள்.
திருத்தணி அருகே சாலையை கடக்க முயன்ற ஒடிசா மாநில சிறுமி அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார். பிரேதத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி அனுமதிக்கப்பட்டு விபத்திற்கு காரணமான அடையாளம் தெரியாத வாகனத்தை திருத்தணி போலீசார் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகில் உள்ளது பீரகுப்பம் ஆரம்ப சுகாதார நிலையம். இந்த பகுதியில் உள்ள தனியார் கிரானைட் கல் உடைக்கும் கம்பெனியில் பணிபுரிபவர் ஸ்ரீகாந்த் மாலிக். இவர் ஒடிசா மாநிலம் பாந்த்ரா மாவட்டம் பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவர் இவரது மனைவி மற்றும் இவரது மகள் ரித்து மாலிக் (வயது10) ஆகியோர் இங்கு தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளனர்.
இவர்கள் வேலை செய்யும் எதிர்ப்பகுதியில் சென்று விட்டு திருத்தணி- வேலூர் நெடுஞ்சாலை கடக்க முயன்ற சிறுமி ரித்து மாலிக் அப்பொழுது வேகமாக வந்த ஒரு அடையாளம் தெரியாத வாகனம் சிறுமி மீது மோதி விட்டு நிறுத்தாமல் மின்னல் வேகத்தில் சென்று உள்ளது.
இதனால் அந்த சிறுமி தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் ஏற்பட்டு இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவத்தை அறிந்த திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுமியின் பிரேதத்தை கைப்பற்றி திருத்தணி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமான விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி- கண்காணிப்பு கேமரா உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர்.
சாலையை கடக்க முயன்ற வட மாநில சிறுமி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.