திருத்தணியில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுமி உயிரிழப்பு
திருத்தணியில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுமி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே குருராஜபேட்டை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ரமேஷ் இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் இவரது 3 வயதுடைய பெண் குழந்தை நிரஞ்சனா மற்றும் குடும்பத்துடன் உறவினர் வீட்டின் நிச்சய தாம்பூலம் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அங்கு விசேஷத்தின் போது குழந்தை நிரஞ்சனா வீட்டின் பின்புறம் உள்ள தண்ணீர் தொட்டி அருகே விளையாடு கொண்டிருந்தால். எதிர்பாராத விதமாக தண்ணீர் தொட்டியில் சிறுமி தவறி விழுந்து மூச்சு திணறல் ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கி மயங்கிக் கிடந்தார்.
குழந்தையை பெற்றோர்கள் தேடியும் காணாத நிலையில் வீட்டின் பின்புறம் தண்ணீர் தொட்டியில் விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து பெற்றோர்கள் கூச்சலிட்டு உடனடியாக குழந்தையை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.