திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த சிவாடா என்ற காப்புக்காடு பகுதியில் கரும்பு தோட்டம் அருகே பாம்புகள் நடமாட்டம் இருப்பதாக தீயணைப்புத் துறையினருக்கு பொது மக்கள் கொடுத்த தகவலின் பேரில் திருத்தணி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேரம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு முதலில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்தனர். அதனை அடுத்து அதே பகுதியில் மற்றொரு பாம்பு ஒன்றும் வருவதைக் கண்ட தீயணைப்பு வீரர்கள் அதனையும் லாவகமாக பிடித்தனர். முதலில் பிடித்த பாம்பு 10 அடியும் இரண்டாவதாக பிடித்த பாம்பு 15 அதிகம் இருப்பதை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதனையடுத்து இரண்டு பாம்புகளையும் தீயணைப்பு வீரர்கள் கொண்டு சென்று வனப்பகுதியில் விட்டனர்.