வாகன சோதனையில் 1 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல்..!
திருத்தணி அருகே வாகன சோதனையில் உரிய ஆவணம் இன்றி எடுத்துவரப்பட்ட 1.72 லட்சம் ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.;
பறிமுதல் செய்யப்பட்ட பணம்.
திருத்தணியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் 1 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்தனர்.
இந்திய தேர்தல் ஆணையம் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19.ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்த உடனேயே தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. பணம்,பரிசு பொருட்கள் விநியோகம் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே நாகலாபுரம் சாலையில் தாழவேடு பகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை மடக்கி சோதனை செய்தனர். சோதனையில் ஈரோடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவர் உரிய ஆவணம் இன்றி எடுத்து வந்த 1.லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து. பின்னர் வருவாய் கோட்டாட்சியர் தீபாவிடம் பறக்கும் படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.