திருத்தணி அருகே கொரோனா கட்டுப்பாடுகளை மீறி தீமிதி திருவிழா
திருத்தணி அருகே கொரோனா கட்டுப்பாடுகளை மீறி நடைபெற்ற தீமிதி திருவிழாவில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.;
திருத்தணி அருகே கொரோனா கட்டுப்பாடுகளை மீறி நடைபெற்ற தீமிதி திருவிழாவில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த முருகம்பட்டு பச்சையம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
நடப்பாண்டில் கொரோனா தொற்று காரணமாக தீமிதி திருவிழா ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆடி மாதம் தொடங்கியதுமே அரசின் கட்டுப்பாட்டை மீறி பச்சையம்மன் கோவிலில் தீமிதி திருவிழா இன்று நடைபெற்றது.
திருத்தணி சுற்றுவட்டாரம் மற்றும் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என 1000க்கும் மேற்பட்டோர் தீக்குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.