தற்போது 23 சதவீதமாக உள்ள காடுகளை 33 சதவீதமாக உயர்த்த வேண்டும்- அமைச்சர்

தமிழ்நாட்டில் தற்போது 23 சதவீதமாக உள்ள காடுகளை 33 சதவீதமாக உயர்த்தி வனத்துறையை அதிகப்படுத்துவதே முதல்வரின் நோக்கம் என வனத்துறை அமைச்சர் கே. ராமச்சந்திரன் தெரிவித்தார்.

Update: 2021-07-23 15:50 GMT

தமிழ்நாட்டில் தற்போது 23 சதவீதமாக உள்ள காடுகளை 33 சதவீதமாக உயர்த்தி வனத்துறையை அதிகப்படுத்துவதே முதல்வரின் நோக்கம் என வனத்துறை அமைச்சர் கே. ராமச்சந்திரன் தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் பகுதியில் உள்ள செங்குன்றம் காப்புகாடுகளில் உள்ள செம்மரங்களை ஆய்வு செய்தார் பின்னர் கும்மிடிப்பூண்டி அடுத்த ராமச்சந்திரபுரத்தில் உள்ள மரக்கன்று நாற்றுக்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பழவேற்காடு பகுதியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான இடங்களை படகின் மூலம் சென்று ஆய்வு செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே. ராமச்சந்திரன் தமிழ்நாட்டில் தற்போது 23 சதவீகிதமாக உள்ள காடுகளை 33 சதவீதமாக அதிகப்படுத்த வேண்டும் என முதலமை‌ச்சரின் தொலை நோக்கின் திட்டத்தை மேம்படுத்தும் வகையில் வருடத்திற்கு 4 1/2 கோடி மரக்கன்றுகளை நடுவதற்கு ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

நெடுஞ்சாலைகளில் இருபுறமும் மரக்கன்றுகளை வைப்பது பொது பணிதுறைக்கு சொந்தமான இடம் கோவில் இடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மரக்கன்றுகளை வைத்து வனத்துறையை அதிகப்படுத்த வேண்டும் எனவும், கடந்த ஆட்சியில் காவலர்கள் பற்றாக்குறையால் செம்மரக்களை பாதுகாக்க முடியாமல் போனது.

தற்போது உள்ள சூழலில் காவலர்களை அதிகபடுத்தி குடோன்கள் அமைத்து செம்மரக்கட்டைகளை பாதுகாக்கப்படும் என வனத்துறை அமைச்சர் கே. ராமச்சந்திரன் தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது சென்னை மண்டல வனசரக தலைவர் கருனைபிரியா, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குனர் தெபஷ்ஸ் ஜனா, உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். 

Tags:    

Similar News