வியாபாரிகளை முன்கள பணியாளராக அறிவிக்க விக்கிரமராஜா வலியுறுத்தல்!

வியாபாரிகளையும் முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கேட்டுக்கொண்டார்.;

Update: 2021-05-28 08:30 GMT

நசரத்பேட்டையில் விக்கிரமராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காட்சி.

கொரோனோ ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை போக்கும் வகையில் வியாபாரிகள் சங்கங்களின் சார்பில் பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை பகுதியில் வாழ்வாதாரம் இழந்த குடும்பங்களுக்கு காய்கறிகளை வியாபாரிகள் சங்கம் சார்பில் காய்கறிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இலவச காய்கறிகளை வழங்கினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது :

கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வியாபாரிகள் சங்கம் சார்பில் பல்வேறு நலத்திட்ட பணிகளை பேரமைப்பு நிர்வாகிகள் தமிழகம் முழுதும் செய்து வருகிறார்கள். வியாபாரிகளை முன் களப்பணியாளர்கள் என அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கிறோம்.

தமிழக முதல்வர் வியாபாரிகளை அழைத்து ஆலோசனை செய்வார் என்று நினைக்கிறோம், தடையின்றி பொருட்கள் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என கேட்டுள்ளோம்.

தமிழக அரசுக்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு துணை நிற்கும். சனிக்கிழமை ஒரு நாள் மட்டுமே விலை உயர்வு இருந்தது. அதன் பிறகு விலை குறைக்கப்பட்டு விட்டது. அதிக விலைக்கு விற்பனை செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News