பூந்தமல்லி எம்எல்ஏ அலுவலகம் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி எம்எல்ஏ அலுவலகத்தை உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ திறந்து வைத்தார்.;
பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் கிருஷ்ணசாமி போட்டியிட்டு பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.
பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தில் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது.
இதில் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
மேலும் பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி அலுவலகத்தில் உள்ள இருக்கையில் அமர வைத்து புகைப்படம் எடுத்து கொண்டார்.
திறப்பு விழாவிற்கு வருகை தந்த உதயநிதி ஸ்டாலினுக்கு பெண்கள் ரோஜா மலர்களை தூவி சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
மேலும் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என உதயநிதி ஸ்டாலின் அழைக்கப்படுவதால் திமுக தொண்டர்கள் சிலர் சாக்லேட்டால் செய்யப்பட்ட மாலைகளை தயார் செய்து உதயநிதி ஸ்டாலினுக்கு அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.