மதுரவாயல்: தூய்மை பணியாளர்களை கவுரவித்த வழக்கறிஞர் சங்கத்தினர்!

கொரோனா ஊரடங்கில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை மதுரவாயலில் வழக்கறிஞர் சங்கத்தினர் கவுரவித்து அசைவ உணவு வழங்கினர்.;

Update: 2021-05-29 08:59 GMT
மதுரவாயலில் தூய்மைப்பணியாளர்களுக்கு அசைவ உணவு வழங்கி கவுரவித்த வழக்கறிஞர்கள்.

கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த முன்கள பணியாளர்களான தூய்மை பணியாளர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.
அவர்களை கவுரவிக்கும் வகையில் பாதுகாவலர் வழக்கறிஞர் சங்க சார்பில் தூய்மை பணியாளர்களை கவுரவித்து அவர்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது. இதனை வழக்கறிஞர் பிரதிப் வழங்கினார். இதேபோல் 500 ஏழை,எளிய மக்களுக்கும் உணவு வழங்கப்பட்டது.

Tags:    

Similar News