தன்னைத்தானே தீயிட்டு பாலத்திலிருந்து குதித்த வாலிபர்; அதிர்ச்சி சம்பவம்

காவல்சேரியில் பாலத்தின் மீதிருந்து கீழே குதித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2021-08-23 10:59 GMT

பைல் படம்.

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் பாலாஜி. இவருக்கு சத்யநாராயணன், சூரிய நாராயணன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.  இதில் தம்பி சூரிய நாராயணனுக்கு திருமணம் ஆகிவிட்டது. ஆனால் அண்ணன் சத்யநாராயண எனக்கு திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில் சத்யநாராயணன் திருநின்றவூரில் உள்ள தனது மாமா வீட்டில் தங்கி வடபழனியில் சங்கரமடத்தில் சமையல் வேலை செய்து வந்தார்.

இன்று விடியற்காலை சத்தியநாராயணன் நெமிலிச்சேரி பாலத்தில் சென்ற போது, காவல்சேரி என்கின்ற இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பிறகு மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை பிடித்து உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துள்ளார்.

தீப்பிடித்து எரியும் போதே பாலத்தின் மீதிருந்து கீழே குதித்துள்ளார். இதனால் படுகாயமுற்ற அவர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து வெள்ளவேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News