ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட குட்கா பறிமுதல்
திருவேற்காடு அருகே சரக்கு ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 330 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது
பூந்தமல்லி அடுத்த திருவேற்காடு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்கள் போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அடுத்த திருவேற்காடு கோலடி பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை சந்தேகத்தின் பேரில் போலீசார் மடக்கி நிறுத்தி சோதனை நடத்தினர். அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் மூட்டை, மூட்டையாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் சரக்கு ஆட்டோ டிரைவர் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணை அந்த நபர் திருமுல்லைவாயில் சரஸ்வதி நகர் பகுதியை சார்ந்த ராஜேந்திரன்(37). என்பதும், அவர் திருவேற்காடு மற்றும் அயனம்பாக்கம் பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளுக்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்களை விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
இதனை அடுத்து அவரிடம் இருந்து 330 கிலோ எடை கொண்ட குட்கா மற்றும் லோடு ஆட்டோவை பறிமுதல் செய்து போலீஸார் அவர் மீது வழக்கு தொடர்ந்து கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்.