பூந்தமல்லி: ஊரடங்கால் கொரோனா 25% குறைந்துள்ளது- கிருஷ்ணசாமி எம்எல்ஏ!

பூந்தமல்லி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தளர்வில்லாத ஊரடங்கால் 25% கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாக பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி கூறினார்.

Update: 2021-06-01 11:53 GMT

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து தினமும் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஈக்காடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆய்வுக்கூட்டம் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கிருஷ்ணசாமி தலைமையில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தளர்வில்லாத ஊரடங்கு காரணமாக கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது என்று தெரிவித்தார். அப்போது, வட்டார வளர்ச்சி அலுவலரும் திருவள்ளூர் தாசில்தாருமான செந்தில் குமார், திமுக நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News