பூந்தமல்லி: கொரோனா நிவாரணம் பெறவந்தவர்களுக்கு முக கவசம், கிருமி நாசினி
பூவிருந்தவல்லியில் தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதி பெறவந்த பொதுமக்களுக்கு திமுக சார்பில் முக கவசம், கிருமி நாசினி வழங்கப்பட்டது.;
கொரோனா நிவாரண நிதியாக தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு குடும்ப அட்டைதாரரகளுக்கு 4 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பூவிருந்தவல்லியில் நகரச் செயலாளர் ரவிகுமார் தலைமையில் கொரோனா நிவாரணத் தொகை பெற வரும் பொதுமக்களுக்கு முக கவசம், கிருமி நாசினி மற்றும் கபசூர குடிநீர் வழங்கப்பட்டது. இதனை பூவிருந்தவல்லி எம்.எல்.ஏ கிருஷ்ணாசாமி வழங்கினார்.