வானகரம் மீன்மார்க்கெட்டில் கூடிய அசைவபிரியர்கள்; கொரோனா பரவும் அபாயம்!

வானகரம் மீன் மார்க்கெட்டில் அலைமோதிய அசைவ பிரியர்கள். கூட்டம் கூடுவதை தவிர்க்க வெளியில் வைத்து வியாபாரம் செய்து வியாபாரிகள்.

Update: 2021-05-23 11:19 GMT
வாகனகரம் மீன் மார்க்கெட்டில் கூடிய மக்கள் கூட்டம்.

கொரோனா  தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாளை முதல் முழு ஊரடங்கை தமிழ் அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் இன்றைய தினம் அனைத்து கடைகளும் திறந்து இருக்கும் என்பதாலும் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் அனைத்து கடைகளிலும் கூட்டம் அலைமோத ஆரம்பித்தது.

குறிப்பாக வானகரத்தில் உள்ள மீன் மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதியது. அசைவ பிரியர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக மார்க்கெட்டின் உள்பகுதியில் வியாபாரத்திற்கு அனுமதிக்காமல், வளாகத்தின் வெளிப் பகுதியில் சிறிய சிறிய பெட்டிகள் வைத்து, அதன் மீது மீன்களை வைத்து வியாபாரிகள் வியாபாரம் செய்தனர். இருந்தாலும் பொதுமக்கள் அதிக அளவில் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருப்பதால் மீன்களின் வரத்து குறைவாக இருப்பதும் ஒரு  காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News