செம்பேடு கிராமத்தில் புதிய பேருந்து சேவை துவக்கம்

செம்பேடு கிராமத்தில் புதிய பேருந்து சேவையை பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி துவக்கி வைத்தார்.;

Update: 2023-01-03 04:45 GMT

செம்மேடு கிராமத்தில் புதிய பேருந்து வழித்தடத்தை துவக்கி வைத்த எம்எல்ஏ கிருஷ்ணஸ்வாமி

பூந்தமல்லி அருகே 40 ஆண்டு கால கோரிக்கை தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றும் வகையில் செம்பேடு லிருந்து திருவள்ளூர் வரை வந்து செல்லும் மகளிர் இலவச புதிய பேருந்து சேவையை பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் செம்பேடு,காதர்வேடு பகுதிகளில் சுமார் 8,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.  இப்பகுதியில் பெரும்பாலும் மக்கள் விவசாயம் தொழிற்சாலை உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர். 

இப்பகுதியில் சுமார் 900க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் உயர்கல்வி படிக்க திருவள்ளூர் செங்குன்றம், பெரியபாளையம், வெங்கல், ஆவடி, அம்பத்தூர் போன்ற  பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். மேலும், விவசாயிகள் அறுவடை செய்யும் காய்கனிகளை சென்னை கோயம்பேடு வணிக வளாகத்திற்கு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்ல சுமார் 5 கிலோ மீட்டர் நீண்ட தூரம் நடந்து சென்று பாகல்மேடு பகுதியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் மூலம் பயணம் மேற்கொண்டு வந்தனர்

சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாகவே இப்பகுதியில் பேருந்து வசதி என்பது இல்லாத நிலையில், இப்பகுதி மக்கள் பல கோரிக்கைகளை வைத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது

இந்த நிலையில் கடந்த தேர்தலின் போது பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட  கிருஷ்ணசாமி செம்பேடு பகுதியில் வாக்கு சேகரிக்க வந்தபோது அப்பகுதி மக்கள் நீங்கள் வெற்றி பெற்றால் இந்த பகுதிக்கு பேருந்தை வசதி செய்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். 

இதனைத்தொடர்ந்து வெற்றி பெற்ற எம்எல்ஏ கிருஷ்ணசாமி தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றும் வகையில் செம்பேடு முதல் திருவள்ளூர் வரை புதிய வைத்தடத்தில் டி.80 என்ற விழுப்புரம் போக்குவரத்து கழகத்தின் மகளிர் இலவச பேருந்து சேவையை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

நிகழ்ச்சிக்கு எல்லாபுரம் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் கோடு வெளி தங்கம் முரளி தலைமை வகித்தார்.  நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசுவாமி கலந்துகொண்டு கொடியசைத்து  புதிய பேருந்து சேவையை துவக்கி வைத்தார். மேலும் பேருந்தில் ஏறி பயணச்சீட்டு வாங்கி பயணம் செய்தார். தங்கள் பகுதிக்கு புதிய பேருந்து வசதியை செய்து தந்த எம்எல்ஏ கிருஷ்ணசாமிக்கு செம்பேடு மக்கள் நன்றியை தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத் தலைவர் முனுசாமி, மாவட்ட பிரதிநிதி டி.பாஸ்கர், பொருளாளர் லோகநாதன் ஒன்றிய துணை செயலாளர்கள் உமா சீனிவாசன், இ. சுப்பிரமணி, மாம்பள்ளம் ஊராட்சி மன்ற தலைவர் சம்பத், நிர்வாகிகள் சேரா சேகர், நாராயணசாமி, கிரானசுந்தரம்,ராஜி, மனோகர்,நடராஜன், மாரி, ஏ.சுப்பிரமணி, செல்வம், ராஜேஷ்,முத்து,வெங்கடேசன், எஸ்.வெங்கடேசன், ஜெயராமன், நாகராஜன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர் 

Tags:    

Similar News