பூந்தமல்லி அருகே வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கம் ஊராட்சியில் வரும் முன் காப்போம் திட்ட முகாமை எம்எல்ஏ கிருஷ்ணசாமி தொடங்கி வைத்தார்
பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கம் ஊராட்சியில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாமை சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி ஒன்றியம், செம்பரம்பாக்கம் ஊராட்சியில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டத்தின் படி பொது மக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு ஒன்றிய கழக செயலாளர் ப.ச.கமலேஷ், முன்னிலை வகித்தார் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வின்சென்ட் அனைவரையும் வரவேற்றார்.
இந்த முகாமிற்கு பூவிருந்தவல்லி சட்ட மன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி தலைமை வகித்து, மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது:
முத்தமிழ் அறிஞர் கலைஞரால் வரும் முன் காப்போம் திட்டம் கொண்டுவரப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வந்தது. அதன்பிறகு அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகள் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் இந்த திட்டம் மிகச் சிறப்பாக செயல்படுத்தப் பட்டு வருகிறது இதன் மூலம் கோடிக்கணக்கான ஏழை எளிய மக்கள் மருத்துவ வசதி பெறுகின்றனர். இந்த மருத்துவ முகாம்கள் மூலமாக அனைத்து விதமான மருத்துவ பரிசோதனைகள், சிகிச்சைகள், மருந்து மாத்திரைகள் இலவசமாக அளிக்கப்படுகிறது. பூவிருந்தவல்லி ரூ.10 கோடி மதிப்பில் நவீன அரசு மருத்துவமனை விரைவில் கட்டப்படும். அதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இம்முகாமில் பொது மருத்துவம், பன்முனை மருத்துவ பரிசோதனை, கண், பல், காது - மூக்கு - தொண்டை, வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், காசநோய், மூட்டு மற்றும் எலும்பு சம்பந்தமான நோய்கள், இருதய நோய்கள், சிறுநீரக கோளாறு, குழந்தை நல சிறப்பு மருத்துவம், மனநல மருத்துவம், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு மருத்துவம் மற்றும் புற்றுநோய் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான பரிசோதனை மற்றும் சிகிச்சைகளும் இலவசமாக மருந்துகளும் வழங்கப்பட்டன.
இதில் பொது குழு உறுப்பினர் வி.குமார், வட்டார மருத்துவ அலுவலர் பிரதிபா மருத்துவ ஆய்வாளர்கள் வடிவேல் , விஜயகுமார், மாவட்ட கவுன்சிலர் ஏஜி.ரவி, ஒன்றிய கவுன்சிலர் பிரியா செல்வம், ஒன்றிய நிர்வாகிகள் ஏ.ஜனார்த்தனன், புகழேந்தி, ஏ.ஆர்.பாஸ்கர், டி.குமரேசன், வி.தணிகாசலம், எம்.ராம்பாபு, திருமலை ராஜ், சாய்மோகன், ஜி.கே.குமார், ராஜாமணி, கே.பி.ஞானமூர்த்தி, எம்.ராதாகிருஷ்ணன், விநாயகம், ஸ்ரீதர், முரளி, சாரங்கன், மனோஜ்குமார், ஊராட்சி துணைத் தலைவர் கன்னியம்மாள் ருத்ரகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்..