புதிய தார் சாலையை அமைக்கும் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

Road Construction in Ariyalur District -பூவிருந்தவல்லி தொகுதி ஆயலூர் கிராமத்தில் 32 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியை எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி துவக்கி வைத்தார்;

Update: 2022-11-16 05:15 GMT

ஆயலூர் கிராமத்தில் தார்சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்த எம்எல்ஏ கிருஷ்ணசாமி

Road Construction in Ariyalur District-திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆயலூர் கிராமத்தில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த பூமி பூஜை நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் முன்னிலை வகித்தார் ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன், வரவேற்புரையற்றினார்

இந்த நிகழ்வில் பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி தலைமை வகித்து பூமி பூஜையில் கலந்து கொண்டு தார் சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்தார். ஆயலூர் கிராமத்திலிருந்து புன்னப்பட்டு வழியாக காலனி வரை செல்லும் இணைப்பு சாலை 780 மீட்டருக்கு இந்த தார் சாலை சட்டமன்ற உறுப்பினர் நிதி 10 லட்சம், மாவட்ட கவுன்சிலர் தென்னவன் நிதியிலிருந்து ரூ.10 லட்சம், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் சாந்தி தரணி நிதி ரூ. 5லட்சம், ஊராட்சி ஒன்றிய பொது நிதி 7 லட்சம் என மொத்த ரூ.32 லட்சத்தில் தார் சாலை  அமைக்கப்பட உள்ளது.

பூமி பூஜையை தொடர்ந்து ஆயலூர் அரசு பள்ளி, கோயம்பாக்கம் ஆரம்பப் பள்ளி, மற்றும் வதட்டூர் ஆரம்பப் பள்ளி ஆகியவற்றில் எம்எல்ஏ., ஆ.கிருஷ்ணசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

பள்ளியில் எவ்வளவு மாணவர்கள் பயின்று வருகின்றனர். ஆசிரியர்கள் எத்தனை பேர் உள்ளனர், பள்ளிக்கு மாணவர்கள் வருகை குறித்து கேட்டறிந்தார். மேலும் அரசு பள்ளியில் இடைநிற்றல் ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும், மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தை சேர்ந்தவர்கள் என்னென்ன பணிகள் மேற்கொள்கின்றனர் என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

பின்னர் கோயம்பாக்கம் தொடக்கப் பள்ளிக்கு சென்ற எம்எல்ஏ, அங்கு பழுதான கட்டடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

பின்னர் வதட்டூர் பள்ளிக்கு சென்ற அவர்,  மாணவ மாணவிகளிடம் பொது அறிவு குறித்து கேள்விகளை கேட்டும், கடவுள் வாழ்த்து, தேசிய கீதம் பாடச் சொல்லி கேட்டார். தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைவாக இருக்கும் காரணத்தை கேட்டறிந்தார். அதற்கு அருகில் பாக்கம் கிராமத்தில் சேவாலயா தொண்டு நிறுவனம் சார்பில் 1 முதல் பிளஸ் 2 வரை இருப்பதால் குழந்தைகளை அந்த பள்ளியில் சேர்ப்பதாக தெரிவித்தனர். அதற்கு உள்ளூரில் இருக்கும் குழந்தைகளை இங்கேயே சேர்த்து படிக்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்எல்ஏ..கிருஷ்ணசாமி கேட்டுக் கொண்டார்

இந் நிகழ்ச்சியில் ஒன்றிய குழு துணை தலைவர் எம்.பரக்கத்துல்லா கான், பொதுக்குழு உறுப்பினர் த.எத்திராஜ், ஒன்றிய கவுன்சிலர் சாந்தி தரணி, நிர்வாகிகள் .சொக்கலிங்கம், தரணி, சண்முகம், சீனிவாசன், பரமேஸ்வரன், ராமச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமணன், நிர்வாகிகள் சிவா பிரகாஷ், குருபரண், பூபதி, சத்தியா, ஜெயபால், பாஸ்கரன், வெங்கடேசன், கோபால், முத்துகிருஷ்ணன், மாசி, ஏகாம்பரம், நடராஜ், மூர்த்தி, சண்முகம், முனுசாமி, முரளி, சங்கர், ஏ.கே.கிரி, தேவகி, ஜெயராமன் குப்பன், உள்பட அரசு அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2 

Tags:    

Similar News