மேப்பூர்: நலத்திட்ட உதவிகளை வழங்கி, தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்திய அமைச்சர்!
மேப்பூர் ஊராட்சியில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பால்வளத் துறை அமைச்சர் சா.மு. நாசர் நல திட்ட உதவிகளை வழங்கி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி ஒன்றியத்தில் உள்ள மேப்பூர் ஊராட்சியில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பூவிருந்தவல்லி ஒன்றியக் குழு பெருந்தலைவர் ஜெய்குமார் தலைமையில் 1000 குடும்பங்களுக்கு முககவசம், கிருமி நாசினி மற்றும் அரிசி, காய்கறி உள்ளிட்ட மளிகை தொகுப்பை பால்வளத்துறை அமைசர் சா.மு.நாசர் வழங்கினார். இதனை சமூக இடைவெளியுடன் பெற்றுக்கொண்டர்.
அப்போது ஒவ்வொருவரிடமும் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் கட்டாயம் தடுப்பூசிக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர் அமைச்ச்ர பேசுகையில், கொரோனா முதல் அலை சங்கிலி தொடரை அகற்ற ஒராண்டுகள் ஆனது. ஆனால் முதல்வர் ஸ்டாலினின் சீரிய முயற்சியால் இரண்டாவது அலை சங்கிலி தொடர் ஒரே மாதத்தில் அகற்றப்பட்டுள்ளது. மற்ற மாநில முதல்வர்களுக்கு முன் உதாரணமாக நமது முதல்வர் உள்ளார் என்றார். இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ கிருஷ்ணாசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.