இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி மாநில தலைவர் வெட்டி படுகொலை..!

பூந்தமல்லியில் டீக்கடைக்குள் வைத்து இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி மாநில தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-05-23 06:00 GMT

கொலை செய்யப்பட ராஜாஜி

பூந்தமல்லி அருகே டீக்கடைக்குள் வைத்து இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி மாநில தலைவர் வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம்,பூந்தமல்லி அடுத்த மாங்காடு அம்பாள் நகர் கிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் ராஜாஜி( வயது 45). இவர் இந்து மறுமலர்ச்சி முன்னேற்ற முன்னணி என்ற கட்சியின் மாநில தலைவராக இருந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி கலா என்ற மனைவியும் ஒரு மகளும் இரண்டு மகன்களும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மாலை பூந்தமல்லி அடுத்த குமணன்சாவடியில் மாங்காடு சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து டீக்கடைக்குள் புகுந்து டீ குடித்து கொண்டிருந்த ராஜாஜியை சரமாரியாக வெட்டினார். இதில் ராஜாஜி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார் . பின்னர் அந்த மர்ம நபர் சாதாரணமாக நடந்து சென்று  இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றார்.

அருகில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டிருந்தவர்கள் அவரை வெட்டுவது கண்டு நாலாபுறமும் பயத்தில்  சிதறி ஓடினர். இது குறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் . தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூந்தமல்லி போலீசார் கொலை செய்யப்பட்டு உயிரிழந்து கிடந்த ராஜாஜி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ராஜாஜி கொலை செய்யப்பட்ட தகவல் பரவியதையடுத்து அவரது குடும்பத்தினரும், கட்சி நிர்வாகிகளும் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கிருந்தவர்களை கலைத்து விட்டனர். மேலும் தற்போது ராஜாஜியின் கொலைக்கான காரணம் என்ன கொலையாளி யார் என்பது குறித்து கடைக்குள் பதிவாகியிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த பகுதியில் பட்டப் பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News