பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டித்து நடைபயணம் வந்த காங்கிரசாருக்கு வரவேற்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டித்து நடைபயணம் வந்த காங்கிரசாருக்கு பூவிருந்த வல்லியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.;

Update: 2022-04-28 07:24 GMT

பூவிருந்த வல்லியில் நடைபயணம் மேற்கொண்ட காங்கிரசாருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

சென்னை புறநகர் பகுதியான பூவிருந்தவல்லி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் அருள் அன்பரசு ந ஏற்பாட்டில் கடந்த 17ஆம் தேதி கோவை மாநகரில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி கோவை முதல் சென்னை வரை சுமார் 550 கிலோமீட்டர் நீண்ட நடைபயணத்தை துவக்கி வைத்தார்.

இந்த நடைப் பயணத்தில் கட்சியைச் சேர்ந்த 56 நபர்கள் கலந்து கொண்டனர்.   இந்த நடைபயணத்தை காங்கிரஸ் கட்சியின் மகாத்மா சீனிவாசன் தலைமையில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம் ,ஸ்ரீபெரும்புதூர் வழியாக நேற்று மாலை பூவிருந்தவல்லி வந்தடைந்தனர்.

இவர்களுக்கு காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் சிறப்பான முறையில் வரவேற்பு அளித்து தனியார் திருமண மண்டபத்தில் மரியாதை செலுத்தி உபசரிப்பு செய்தார். கடந்த 17 நாட்களாக நடைபயணமாக வந்த 56 காங்கிரஸ் நபர்களும்இன்று சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களை சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

செய்தியாளர் சந்திப்பில் ஜி.எஸ்.டி. பாத யாத்திரை கோவை முதல் சென்னை வரை 550 கிலோ மீட்டர் ஐம்பத்தி ஏழு நபர்கள் பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வரவேண்டும் என்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மத்திய அரசை வலியுறுத்தி இந்த பாதயாத்திரை ஏற்படுத்தும் என்ற வகையில் தொடங்கியதாக கூறினார்கள்.

Tags:    

Similar News