திருவேற்காடு அருகே தனியார் நர்சிங் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

திருவேற்காடு அருகே தனியார் நர்சிங் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-07-31 05:00 GMT

திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு பகுதியில் தனியார் நர்சிங் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நர்சிங் கல்லூரியின் விடுதியில், மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், மாணவி மர்மமான முறையில் இறந்ததாக சொல்லப்படுகிறது. மாணவியின் மரணம் குறித்து திருவேற்காடு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் தற்கொலை செய்துகொண்ட மாணவி ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் என்று, முதல் கட்ட விசாரணைகள் தெரியவந்துள்ளது.

மாணவியின் கைபேசி யாருக்காவது போன் செய்து அதில் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா அதேபோல் மாணவி தங்கியிருந்த அறையில் அவரது உடைமைகளையும் சோதனை செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News