காசிரெட்டிபேட்டையில் அனுமதியின்றி ஆற்றில் மணல் கடத்திய வாலிபர் கைது

காசிரெட்டிபேட்டையில் அனுமதியின்றி ஆற்றில் மணல் கடத்திய வாலிபரை, போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Update: 2021-07-16 18:40 GMT

பைல் படம்

திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம் காசிரெட்டிபேட்டை ஆரணி ஆற்றில் இருந்து அனுமதியின்றி மணல் கடத்துவதாக பென்னலூர்பேட்டை காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது காசிரெட்டிபேட்டை கிராமம் ஆரணி ஆற்றில் இருந்து அனுமதியின்றி மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி வந்த ஒரு வாலிபரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவர் கொண்டு வந்த 4 மூட்டை மணலை பறிமுதல் செய்தனர். பின்னர் காவல் நிலையம் கொண்டு வந்து அந்த வாலிபரிடம் விசாரணை செய்தனர். 

விசாரணையில் அவர் காசிரெட்டிபேட்டை கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (27) என்பது தெரியவந்தது. எனவே குற்றவாளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து திருவள்ளூர் முதல்நிலை குற்றவியல் நீதிமன்ற மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News