மகளிர் உரிமை திட்டம் குறித்த இறுதிகட்ட பயிற்சி
பொன்னேரியில் மகளிர் உரிமை திட்டம் குறித்த இறுதிகட்ட பயிற்சி முகம் நடைபெற்றது.
பொன்னேரியில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் குறித்த இறுதிகட்ட பயிற்சி நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் திருவள்ளூர் மாவட்ட வருவாய் துறை சார்பில் செப்டம்பர் மாதம் மகளிர் அணி வழங்கப்பட உள்ள ரூபாய் 1000.கலைஞர் மகளிர் உரிமை திட்டம் குறித்த இறுதி கட்ட பயிற்சி கூட்டம் வருவாய் ஆய்வாளர்கள்,கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு நடைபெற்றது.
கலைஞர் மகளிர் உரிமை திட்டம் ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான தகுதி உள்ளவர்கள் தகுதி இல்லாதவர்கள் குறித்த விளக்கத்தினை விளம்பர பதாகைகள் மூலமும்,இல்லம் தேடி கல்வி பணியாளர்கள் மூலமும், தன்னார்வலர்கள் மூலமும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்காக கணக்கெடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள செயலியை பயன்படுத்தி பயனாளிகளை இணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் பயனாளிகளை உறுதிப்படுத்துவதற்கான பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து வருவாய் ஆய்வாளர்கள்,கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு விளக்கப் பயிற்சி நடைபெற்றது.
இந்த பயிற்சி கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ் கலந்து கொண்டு விளக்கம் அளித்தார்.பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார்,துணை வட்டாட்சியர் சிவகுமார் உள்ளிட்ட வருவாய் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.