முதியோர்களுக்கான இலவச மருத்துவ முகாம்
பொன்னேரி அருகே நடந்த முதியோர் களுக்கு இலவச மருத்துவ முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன
பொன்னேரி அடுத்த திருப்பாலைவனத்தில் முதியோர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரி அடுத்த திருப்பாலைவனத்தில் முதியோர்கள் திருவிழா நடைபெற்றது. இதில் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட 30.க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசித்து வரும் மகனால், மகளால் கைவிடப்பட்டோர். மகன்களே இல்லாத தனிமையில் முதுமையிலும், வறுமையிலும் வசித்துக் கொண்டிருக்கும் முதியோர்களுக்கு தாய் தொட்டில் எனும் திட்டத்தின் சார்பில் மாதந்தோறும் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் முதியோர்கள் திருவிழா பொன்னேரி அடுத்த திருப்பாலைவனத்தில் உள்ள சமுதாய கூடத்தில் கொண்டாடப்பட்டது.
இந்த திருவிழாவில 100.க்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு தல 10 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டது. அதன் பிறகு ஒவ்வொரு முதியோர்களுக்கும் இயற்கை முறை வைத்தியமான அக்குபிரசர், அக்குபஞ்சர் மூலம் உடல்நலத்துடன் இருப்பதற்காக மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி சிகிச்சையும் செய்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. முதியோர்கள் ஆடல் பாடலுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சியில், மருத்துவர்கள் பாஸ்கர், கணேசன் ஆகியோர் இயற்கை முறை வைத்தியமான அக்குபங்க்சர் சிகிச்சை அளித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் பவானி கங்கை அமரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை விடுதலை சமூக நல அறக்கட்டளை நிறுவனர் பி. ஆர்.ஆறுமுகம் மற்றும் கார்த்திக், அபித், சங்கீத், அனிதா ஆகியோர் செய்தனர்.