திருவள்ளூர் கோடுவல்லி: வீட்டுக்குள் புகுந்த 4 அடி பாம்பு பிடிபட்டது!
திருவள்ளுர் மாவட்டம் கோடுவல்லி கிராமத்தில் வீட்டுக்குள் புகுந்த 4 அடி பாம்பை இளைஞர்கள் உயிருடன் மீட்டு காட்டுக்குள் விட்டனர்.;
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட கோடுவல்லி கிராமத்தில் 4 அடி நீளம் கொண்ட சாரைப் பாம்பு வீட்டுக்குள் புகுந்தது.
வீட்டின் உரிமையாளர் சத்தம் போடவே அங்கிருந்த இளைஞர்கள் வலை, கொம்பு கொண்டு வீட்டுக்குள் புகுந்த சாரைப்பாம்பை உயிருடன் பிடித்து காட்டுக்குள் விட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.