பூண்டி அருகே தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த இளம் பெண் கைது!

பூண்டி அருகே போந்தவாக்கம் கிராமத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொட்களை விற்பனை செய்த இளம்பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-05-27 14:32 GMT

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் போந்தவாக்கம் கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே மளிகை கடை நடத்தி வருபவர் நிர்மலா என்ற இளம் பெண். இவரது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வதாக பென்னலூர்பேட்டை காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது தலைமையில் போலீசார் இன்று அந்த கடையில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது கடையில் மறைத்து வைத்திருந்த குட்கா, ஹன்ஸ் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இவற்றின் மதிப்பு ரூ. 20ஆயிரம் ஆகும். இந்த சம்பவம் தொடர்பாக கடையின் உரிமையாளர் நிர்மலாவை போலீசார் கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News