நடிகர் விஜய் நாளை முதல்வர் என பேனர் வைத்ததால் பரபரப்பு
ஜூன் 22ல் பிறந்தநாள் காணும் நாளைய முதல்வர் அவர்களுக்கு அன்பு தம்பிகளின் பிறந்தநாள் வாழ்த்துகள் என பேனர் வைத்துள்ளனர்
நடிகர் விஜய்யை நாளைய முதல்வர் என வர்ணித்து அவரது ரசிகர்கள் பொன்னேரியில் பேனர் வைத்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டது.
சமீப காலமாக தமிழகத்தில் மதுரை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நடிகர் விஜய் பிறந்தநாள் சுவரொட்டிகளில் அடுத்த முதல்வர், நாளைய தமிழகம் என குறிப்பிடும் விதத்தில் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை உண்டாக்கி வருகிறது. இந்த வகையில் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் நடிகர் விஜய்யை நாளைய முதல்வர் என குறிப்பிட்டு அவரது ரசிகர்கள் பேனர் வைத்துள்ளனர்.
பொன்னேரி நகராட்சி 12வது வார்டில் அடங்கிய வள்ளலார் தெரு சந்திப்பில் இந்த பேனர் வைக்கப்பட்டுள்ளது.அதில் ஜூன் 22ல் பிறந்தநாள் காணும் நாளைய முதல்வர் அவர்களுக்கு அன்பு தம்பிகளின் பிறந்தநாள் வாழ்த்துகள் என குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த பிறந்தநாள் வாழ்த்து பேனர் பொன்னேரியில் அரசியல் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார்.
இவர் ஹீரோ மெட்டீரியலே இல்லை, வெறும் ஜூனியர் ஆர்டிஸ்ட் கேட்டகிரி என விமர்சிக்கப்பட்ட ஒருவரின் திரைப்படங்கள் இன்று வெளியாகும்போது, வீட்டிலுள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பம் சகிதமாக திரையரங்குகளுக்குச் சென்று, திரையரங்குகளைத் திருவிழா கூடமாக மாற்றிவிடுகிறார்கள். நடிக்கவே தெரியவில்லை என்ற ஆரம்ப கால விமர்சனங்களை புறந்தள்ளி இன்று நடனம், நகைச்சுவை, ரொமான்ஸ், ஆக்ஷன் என அனைத்திலும் கில்லியாக இருக்கும் நடிகர் விஜயின் 49வது பிறந்த நாள் இன்று.
இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகருக்கும், பாடகி ஷோபாவுக்கும் சென்னையில் ஜூன் 22-ஆம் தேதி 1974- ஆம் ஆண்டு, மகனாக பிறந்தவர் தான் ஜோசப் விஜய். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத் துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகத் திகழ்கிறார்.