ஊதியம் வழங்க வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்

ஆரணி பேரூராட்சியில் கடந்த 45நாட்களாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2023-05-16 02:30 GMT

ஆரணி பேரூராட்சியில் கடந்த 45நாட்களாக ஊதியம் வழங்கவில்லை என கூறி தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

ஆரணி பேரூராட்சியில் கடந்த 45நாட்களாக ஊதியம் வழங்கவில்லை என கூறி தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து பேரூராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம். குப்பைகள் சேகரிக்கப்படாததால் தெருக்களில் தேக்கம் அடைந்து துர்நாற்றம் வீசுநி நிலையால் பொதுமக்கள் வேதனயடைந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆரணி பேரூராட்சியில் 15வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 18,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கடந்த 45நாட்களாக ஊதியம் வழங்கப்படவில்லை எனவும், தங்களுக்கான ஊதியத்தை உயர்த்தி தர வலியுறுத்தியும் இன்று தூய்மை பணிகளை புறக்கணித்து பேரூராட்சி அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தூய்மை பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் வார்டுகளில் உள்ள குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன.

இதனால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் சுகுமார், நியமன குழு உறுப்பினர் கண்ணதாசன், மற்றும் அதிகாரிகள் தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து தூய்மை பணியாளர்கள் தெரிவிக்கையில் ஆரணி பேரூராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தாங்களுக்கு சரிவரை சம்பளம் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருவதாகவும். பலமுறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றும் தங்களுக்கு நிரந்தர முடிவு காணும் வரை பணிகளை புறக்கணிப்பு போவதாக பணியாளர்கள் தெரிவித்தனர்.


Tags:    

Similar News