சுதந்திர வீரர்கள் பெயர்களை சொல்லி அசத்தும் சிறுமி..!

பொன்னேரி அருகே சுதந்திரத்திற்காக போராடிய75 போராட்ட சுதந்திர வீரர்கள் பெயர்களை சொல்லி அசத்தும் 4.வயது சிறுமி.

Update: 2023-08-12 03:00 GMT

சிறுமி தேவன்யா.

பொன்னேரி அருகே இந்திய சுதந்திரத்திற்காக போராடி உயிர்நீத்த 75 சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்களை அசத்தலாக நினைவாற்றலுடன் கூறும் நான்கு வயது சிறுமி.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த மீஞ்சூரை சேர்ந்த சிறுமி தேவன்யா. நான்கு வயதே கொண்ட பால்மனம் மாறாத இந்த சிறுமி ஆங்காடு கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் யூகேஜி படித்து வருகிறார். குழந்தைகளுக்கே உரிய விளையாட்டுத்  தனம் கொண்ட தேவன்யா அசாத்திய நினைவுத்திறன் கொண்டவராக திகழ்கிறார்.

பல நூறு  ஆண்டுகாலமாக பல்வேறு காலகட்டத்தில் வெள்ளையர்களிடமிருந்து இந்தியாவை மீட்டிட தன்னுயிர் தந்து போராடிய மாவீரர்களாக வரலாறு போற்றும் தமிழகத்தின் வீரபாண்டிய கட்டபொம்மன் முதல் வங்காளத்து சிங்கம் சுபாஷ் சந்திரபோஸ் வரையிலான 75 பேரின் பெயர்களை மிக சரளமாக மடைதிறந்த வெள்ளமாக சொல்கிறார் சிறுமி தேவன்யா.

தேவன்யாவின் தாயார் ஸ்டெல்லா இதுகுறித்து கூறுகையில்,

என் குழந்தைக்கு இந்திய விடுதலை போராட்ட வீரர்கள் வரலாறு குறித்து சொல்லி கொடுத்தேன். அவள் அதில் அதிக அளவில் ஈடுபாடு காட்டவே நாங்கள் விடுதலை போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர்களின் விபரங்களை ஆல்பமாக திரட்டி அவளிடம் காட்டினேன். ஆரம்பத்தில் சிலரின் பெயரை சரியாக கூறிய தேவன்யா தற்போது 75 விடுதலை போராட்ட வீரர்களின் பெயர்களை மிகுந்த நினைவாற்றுதலுடன் கூறுகிறார் என பெருமையுடன் குறிப்பிட்டார்.

தேவன்யாவின் பள்ளி முதல்வர் கல்யாணி கூறுகையில்,

இப்ப இருக்குற குழந்தைகளிடம் விழிப்புணர்வு மிக குறைவாகவே உள்ளது. அவங்க தேவையில்லாமல் மொபைல் போனில் மூழ்கிடறாங்க இதற்கு பெற்றோர்களும் ஒரு காரணம். எல்லா குழந்தைகளுமே ஒவ்வொரு விதத்தில் திறமைசாலிகள்தான். அவர்களது அசாத்திய திறமையை கண்டறிந்து அவர்களது தேடலைக் வெளிக்கொணர வேண்டியது பெற்றோர்களின் கடமையாகும் என தெரிவித்தார். 76வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த தருணத்தில் சிறுமி தேவன்யாவும் ஒரு சல்யூட் அடிப்போம்.

தற்போதைய குழந்தைகள் செல்போனில் தங்களது வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர். செல்போனில் பொழுதைக் கழிப்பதால், அவர்கள் உடல் அசைவுறாமல் ஒரே இடத்தில் இருக்கிறது. ஓடியாடி விளையாடவேண்டிய வயதில் முடங்கிக் கிடைப்பதால் உடல்பருமன் போன்ற ஆரோக்ய பிரச்னைகளும் மன அழுத்தம் போன்ற பிற குறைபாடுகளும் குழந்தைகளைத் தாக்கும். பெற்றோர் மட்டுமே இதை கண்காணித்து செல்போனை குழந்தைகளுக்கு கொடுக்காமல் இருக்கவேண்டும். 

தனித்திறன்களை வளர்க்க தேவன்யா போன்ற குழந்தையைப்போல வேறு ஏதாவது ஒரு திறனை வளர்ப்பதில் பெற்றோர் பங்கெடுக்கவேண்டும். குழந்தையின் திறமையை வாழ்த்துவோம்.

Tags:    

Similar News