செங்குன்றம் செல்லும் அரசு பேருந்து மேற்கூரை பெயர்ந்ததால் பரபரப்பு
அதிருஷ்டவசமாக பின்னால் வந்த வாகன ஓட்டிகள் மேலே விழாமல் இருந்ததால் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் இருந்து பொன்னேரி வழியாக செங்குன்றம் செல்லும் அரசு மாநகர பேருந்து பலத்த காற்றின் காரணமாக மேற்கூரை பெயர்த்து கொண்டதால் பரபரப்பு.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, சோழவரம், மீஞ்சூர், செங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த சூறைக்காற்று வீசியது. இச்சூழலில்,திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் இருந்து. பொன்னேரி வழியாக செங்குன்றம் செல்லும் 558பி அரசு மாநகர பேருந்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்து கொண்டிருந்தபோது. காற்று பலமாக வீசியதால் அரசு மாநகர பேருந்தின் மேற்கூரை பிரித்துக் கொண்டு சாலையில் ஓடியது.
இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறி அடித்து கூச்சலிடவே உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு பேருந்தில் இருந்த பயணிகள் இறக்கி விடப்பட்டனர். மேலும் கூறை பிய்த்துக் கொண்ட நிலையில், பின்னால் வந்த வாகன ஓட்டிகள் மேலே விழாமல் இருந்ததால் அதிருஷ்டவசமாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில் பலத்த காற்றின் காரணமாக தற்போது அரசு மாநகர பேருந்தின் மேற்கூரை பிரித்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.