இணைப்பு கொக்கி உடைந்து என்ஜின், பெட்டிகள் தனியே கழன்றதால் பரபரப்பு

மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலில் இணைப்பு கொக்கி உடைந்து இன்ஜின் தனியே பெட்டிகள் தனியே கழன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-10-03 04:15 GMT

ஆந்திராவில் இருந்து சரக்கு ரயில் ஒன்று சரக்குகளுடன் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் வந்த போது இரண்டு பெட்டிகளுக்கு இடையே இருக்கும் இணைப்பு கொக்கி உடைந்து இஞ்சினுடன் ஒரு பெட்டி மற்றும் தனியாக கழன்று சென்று விட்டன.

இதனை அடுத்து சுதாரித்த ஓட்டுனர் உடனடியாக அருகில் உள்ள மீஞ்சூர் ரயில் நிலையத்தில் நிறுத்தினார். நடுவழியில் சரக்கு ரயில் இருந்து இன்ஜின் பெட்டிகள் தனித்தனியாக கழன்ற சம்பவம் காரணமாக சென்னை மார்க்கத்தில் செல்லக்கூடிய ரயில் சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. இதனால் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை செல்லும் மார்க்கத்தில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக ரயில் சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டி பொன்னேரி என புறநகர் ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஆங்காங்கே நின்றன. தற்காலிக ஏற்பாடாக சென்னையில் இருந்து வந்த புறநகர் ரயில்களை மீஞ்சூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி அங்கிருந்து சென்னை மார்க்கத்திற்கு திருப்பி இயக்கப்பட்டது.

இதனிடையே ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்தில் வந்து கழன்று நின்ற சரக்கு ரயிலை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மாற்று எஞ்சின் வரவழைக்கப்பட்டு தனியாகப் பிரிந்து சென்ற சரக்கு ரயிலுடன் பின்பக்கத்தில் இணைத்து ரயில் மீஞ்சூர் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. இரண்டு பெட்டிகளிலும் உடைந்த இணைப்பு கொக்கிகளை அகற்றி புதிய கொக்கைகளைப் பொருத்தி சரக்கு ரயிலை இணைத்தனர்.

நடுவழியில் நிறுத்தப்பட்ட சரக்கு ரயில் மீஞ்சூர் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து சென்னை மார்கத்தில் ரயில்கள் மாற்று தண்டவாளத்தில் இயக்கப்பட்டன. சரக்கு ரயில் பெட்டிகளில் இணைப்பு கொக்கி உடைந்து எஞ்சின் தனியே கழன்ற சம்பவம் காரணமாக சுமார் 2மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டு பயணிகள் அவதியடைந்தனர்.

Tags:    

Similar News