தாமரைப்பாக்கம் சாலையோர வியாபாரிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்!
கடைகள் அகற்றப்படுவதை கண்டித்து தாமரைப்பாக்கம் சாலையோர வியாபாரிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை, எல்லாபுரம் அடுத்துள்ள தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் சாலையோர வியாபாரிகளான இளநீர், பூ, பழக்கடைகள் அனைவரும் 40 வருடத்துக்கு மேலாக கடை வைத்திருந்தனர்.
தனியார் தொழிற்சாலைக்காக கடைகளை அகற்றி சாலை விரிவாக்கப் பணியை மேற்கொள்வதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
இதனால் தங்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேற வழியில்லை என்று கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.