நடன முகாமில் நூற்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் நடனம் ஆடி அசத்தல்..!
மீஞ்சூரில் கோடைகால நடன முகாமில் நூற்றுக்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள் நடனம் ஆடினர்.;
பொன்னேரி அடுத்த மீஞ்சூரில் கோடைகால நடன முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மற்றும் தனியார் பள்ளி குழந்தைகள் ஒரே நேரத்தில் நடனமாடி அசத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூரில் பவுன்ஸ் அண்ட் குரூவ்ஸ் நடன நிறுவனம் சார்பில் கோடைக்கால சிறப்பு நடன முகாம் ஒருமாத காலமாக நடைபெற்றது.இதில் மீஞ்சூர்,பொன்னேரி,கல்பாக்கம்,பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆர்வமாக பங்கேற்று நடனம் கற்றுக் கொண்டனர். கோடைகால சிறப்பு நடன முகாமின் நிறைவு விழா மீஞ்சூரில் உள்ள தனியார் மண்டபத்தில் பவுன்ஸ் அண்ட் குரூவ்ஸ் நிறுவனர் அருள் தலைமையில் நடைபெற்றது. குழந்தைகள் இதில் ஒரு மாத காலமாக கற்றுக் கொண்ட நடனங்களை ஆடி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
குறிப்பாக கல்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி மாணவ,மாணவிகள் அனைவரையும் கவரும் வகையில் இருந்தது.மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட சினிமா பிரபலங்கள் மற்றும் தொலைக்காட்சி பிரபலங்கள் குழந்தைகளுடன் நடனமாடி உற்சாகப்படுத்தினர்.
நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பாடல்களுக்கு நடனமாடி அனைவரையும் அசத்தினர். நிகழ்ச்சியின் முடிவில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பாண்டியராஜன், மகாராஜன், ஜெயராஜ், பிரேமலதா, விஜயலட்சுமி ஆகியோர் குழந்தைகளுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றிதழும் வழங்கினர். இதில் ஏராளமான குழந்தைகளின் பெற்றோர்கள் நடனக் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
தனித்திறன் வளர்க்கும் நடன நிகழ்ச்சி மாணவர்களுக்கு மகிழ்ச்சி தருவதாக அமைந்தது. பொதுவாகவே குழந்தைகள் நடனம் என்றால் மகிழ்ச்சியாக ஈடுபடுவார்கள். அதை இந்த நடன முகாம் உறுதிப்படுத்தியுள்ளது என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறினர்.